Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்.பி.ஏ: கல்விக் கடன் கிடைக்குமா?

 
 

கேள்வி-பதில்

 ?தனியார் கல்லூரி ஒன்றில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்.பி.ஏ படித்துவரும் எனக்கு கல்விக் கடன் கிடைக்காது என்கிறார்கள். நிஜமா?

எம்.சந்திரசேகர், போரூர்.

எஸ்.சுப்புராமன், முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை.

''அரசு, தனியார் என எந்தக் கல்லூரியில் படித்தாலும் கல்விக் கடன் கிடைக்கும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் கிடைக்கும் என்பதே உண்மை.''

?ஐ.சி.ஐ.சி.ஐ புரூ.டைனமிக் ஃபண்டில் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?

ஆரோக்கியசாமி, மணப்பாறை. என்.ஸ்ரீகாந்த், நிதி ஆலோசகர், ஸ்ரீஇன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ்.

''ஐ.சி.ஐ.சி.ஐ புரூ.டைனமிக் ஃபண்ட், லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் வகையைச் சேர்ந்தது. பொதுவாக, இந்தவகை பண்டுகளில் 90% ஈக்விட்டியில் முதலீடு செய்வார்கள். மீதமுள்ள 10  சதவிகிதத்தைப் பணமாகவும் வைத்திருப்பார்கள். இந்த வகை ஃபண்டுகளிலே நல்ல வருமானம் தரக்கூடிய ஃபண்டாகச் செயல்பட்டு வருவதாலும் நிஃப்டி குறியீட்டைவிட அதிக வருமானம் தருவதாலும், இதில் தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்''.

?என் மனைவியின் பெயரில் 30 லட்சம் ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட்டில் உள்ளது. அதற்கு வட்டி வருமானமாக வருடத்துக்கு ரூ.3 லட்சம் கிடைக்கிறது. இதில் 1  லட்சம் ரூபாயை பி.பி.எஃப் கணக்கில் முதலீடு செய்கிறார். அவர் வேலைக்குச் செல்ல வில்லை. அவர் வரி செலுத்த வேண்டுமா?

சரவணன், சென்னை. ஸ்ரீகாந்த், ஆடிட்டர், கற்பகம் அண்ட் கோ.

''உங்கள் மனைவி வேலைக்குச் செல்லவில்லை என்பதால் வட்டி வருமானத்தைத் தவிர்த்து, அவருக்கு வேறு எந்த வருமானமும் இல்லை.

3 லட்சம் ரூபாய் வட்டி வருமானத்திலிருந்து 1 லட்சம் ரூபாயை பி.பி.எஃப்.-ல் முதலீடு செய்வதால் வருமான வரிச் சட்டம் 80சி-ன் கீழ் வரிவிலக்கு கிடைக்கும். மீதமுள்ள 2 லட்சம் ரூபாய், அடிப்படை வருமான வரி வரம்புக்குள் வருவதால் அவர் வரி செலுத்த தேவையில்லை.''

?எல்.ஐ.சி-ல் மார்க்கெட் பிளஸ் பாலிசியை 2008-ம் ஆண்டு எடுத்தேன். ஆண்டுக்கு ரூ.10,000  என ஆறு வருடமாக பிரீமியம் செலுத்தி வருகிறேன். இதைத் தொடரலாமா?

ராதா, கோவை. வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர், அக்யூ வெல்த் அட்வைஸர்.

''மார்க்கெட் பிளஸ் என்பது யூனிட் லிங்க்டு பென்ஷன் திட்டம் (யூலிப்) ஆகும். நீங்கள் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்துள்ளீர்கள். இதில் முதலீடு செய்யும் தொகை முழுவதும் ஈக்விட்டி சார்ந்த

திட்டங்களில் முதலீடு செய்யப்படும். நீண்ட காலநோக்கில் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், இதை அப்படியே தொடரலாம். யூலிப் திட்டங்களில் மார்க்கெட் பிளஸ் திட்டம் நல்ல வருமானத்தைத் தந்துவருகிறது. இது பென்ஷன் பிளான் என்பதால் பாலிசி முதிர்வுக்குமுன் சரண்டர் செய்யும்போது வரி செலுத்தவேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள்.''

?நான் ஏற்கெனவே ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தேன். பாலிசி எடுக்கும்போது நான், எனது மனைவி மற்றும் ஒரு குழந்தை மட்டும் கவரேஜ் பெற்றிருந்தோம். இப்போது இன்னொரு குழந்தைப் பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த அடையாள அட்டையும் பெறவில்லை. சமீபத்தில் இரண்டாவது குழந்தைக்கு சிகிச்சை எடுத் தோம். இதற்கு இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிளைம் பெற முடியாது என்கிறார்கள். இது உண்மையா?

ஆறுமுகசாமி, தஞ்சாவூர். பி.பகுபலி, மேலாளர், நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி.

''ஃப்ளோட்டர் பாலிசியில் குறிப் பிட்டுள்ள நபர்களுக்கு மட்டும்தான் கிளைம் பெற முடியும். 3 நபர்கள் உள்ள ஃப்ளோட்டர் பாலிசிக்கும், 4 உறுப் பினர்கள் உள்ள பாலிசிக்கும் பிரீமியம் வித்தியாசப்படும். எனவே, இரண்டாவது குழந்தைப் பிறந்தபிறகு, பாலிசியைப் புதுப் பிக்கும்போது குழந்தையின் பெயரையும் பாலிசியில் சேர்த்து கூடுதல் பிரீமியம் செலுத்தினால்தான் கவரேஜ் பெற முடியும். எனவே, புதிதாகப் பிறந்துள்ள உங்கள் குழந்தைக்கு இந்த பாலிசி மூலம் கிளைம் பெற முடியாது.''

?நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள அப்பார்ட்மென்டில் ஒரு ஃப்ளாட்டை வாங்கியிருந்தேன். கழிவுநீர் வசதி செய்துதரவில்லை. கடந்த ஒரு வருடமாக லாரி மூலமாகவே கழிவுநீரை அப்புறப்படுத்தி வருகிறோம். இதற்கான செலவுகளை நாங்களே செய்து வருகிறோம். இதற்காக பில்டர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?

குமரகுருபரன், சென்னை. ஏ.பழனியப்பன், வழக்கறிஞர்.

''வீடு வாங்கும் முன்பு நீங்கள் பில்டருடன் ஒப்பந்தம் போட்டிருப்பீர்கள். அந்த ஒப்பந்தத்தில் என்னென்ன வசதிகள் செய்துதருவதாகக் கூறியுள்ளார் என்பதைக் கவனியுங்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வசதிகளைச் செய்துதரவில்லை எனில், அவர் மீது மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். வீடு உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் அவர் செய்துதருவதாக ஒப்புக்கொண்ட வசதிகளைச் செய்து தரவேண்டும்.''

?நான் சிறிய அளவில் கம்பெனி நடத்தி வருகிறேன். இதை பப்ளிக் லிமிடெட் நிறுவனமாகப் பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

கண்ணன், சென்னை. எல்.சார்லஸ், ஆடிட்டர்.

''கம்பெனி சட்டம் 2013-ன்படி உங்கள் நிறுவனத்தை பப்ளிக் லிமிடெட்டாகப் பதிவு செய்யலாம். உங்களின் நிறுவனத் துக்குத் தேவையான முதலீட்டுக்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி நடத்தப் போகிறீர்கள் எனில் இதைச் செய்யலாம்.''

படம்: தி.குமரகுருபரன்.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ