Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதுகாப்பு இல்லாமல் வீணாகும் 40 சதவிகித உணவு தானியங்கள்.

பாதுகாப்புக் குறைவினால் 40 சதவிகித உணவு தானியங்கள் வீணாகிறது என அசோசெம் தெரிவித்துள்ளது. நாட்டில் விளையும் உணவு தானியங்களைக் கிடங்குகளில் முறையாகப் பாதுகாக்கவில்லை எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சேமிப்புக் கிடங்குகளில் தொழில் ரீதியாக உணவு
 
தானியங்களைப் பாதுகாப்பதற்குப் போதுமான வசதிகள் இல்லை என்ற இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்புக் கிடங்குகளில் 70 சதவிகிதம் அரசு கட்டுப்பட்டில் உள்ளது. இதில் 11 கோடி டன் உணவு தானியங்களைச் சேமிக்க முடியும். மேலும் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் கூடுதலாக 3.5 கோடி டன் உணவு தானியங்கள் சேமிப்பதற்குக் கிடங்குகள் இல்லை என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகச் சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கு முன் ஏற்கனவே உள்ள கிடங்குகளை மேம்படுத்த வேண்டும் என இதில் கூறப்பட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ