Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

Heartbleed - இணையத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு!

Heartbleed - இணையத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு!

இணையத்தில் மின்னஞ்சல், பணப் பரிமாற்றம் உட்பட ரகசிய பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் இணையதளங்கள் நமது பாதுகாப்பிற்காக OpenSSL எனப்படும் மறையாக்க (Encryption) முறையை பயன்படுத்துகின்றனர்.  இதன் மூலம் ஹேக்கர்கள் நமது தகவலை திருடுவதிலிருந்து பாதுகாக்கலாம். இணையத்தில் நாம் பயன்படுத்தும் பல்வேறு தளங்கள் நம் பாதுகாப்பிற்கு இதை பயன்படுகின்றன.

ஆனால் அதில் தற்போது "Heartbleed" எனப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு ஓட்டை கண்டறியப்பட்டுள்ளது. இதை Codenomicon நிறுவனத்தை சேர்ந்த 3 பொறியாளர்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தை நீல் மேத்தா என்பவரும் கடந்த 7ஆம் தேதி கண்டுபிடித்தனர்.

Heartbleed என்பது இணையதளங்களை நிர்வகிக்கும் சர்வர்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு ஓட்டை ஆகும். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் தகவல்களை எளிதாக திருட முடியும். இதில் உங்கள் பெயர், பாஸ்வேர்டு, மற்றும் நீங்கள் அனுப்பும் செய்தி ஆகியவை அடங்கும்.


யாஹூ, ப்ளிக்கர் (Flickr), வி-ட்ரான்பர் (wetransfer) போன்ற பிரபல இணையதளங்கள் உள்பட பெரும்பாலான தளங்களில் இந்த பாதுகாப்பு ஓட்டை உள்ளது.

தற்போது பல தளங்கள் இந்த ஓட்டையை சரிசெய்துவிட்டன. ஆனாலும் இணையத்தில் பல்வேறு தளங்களில் அனுப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் பயன்படுத்தும் தளங்கள் தான் இந்த பிரச்சினையில் இருந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க முடியும். எனினும் உங்கள் தரப்பு பாதுகாப்பிற்காக இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் தளங்களில் பாஸ்வேர்டுகளை உடனே மாற்றிவிடுங்கள்!

நீங்கள் பயன்படுத்தும் தளம் OpenSSL பயன்படுத்துகிறதா, அதில் உங்கள் கடவுச்சொல் தகவல்களை மாற்ற வேண்டுமா என்று அறிய  கீழே உள்ள பக்கத்திற்கு செல்லவும்.
https://www.ssllabs.com/ssltest/

மேலும் விரிவான தகவல்கள் தேவைப்படின்
http://heartbleed.com/

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ