Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்னினோ : சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படுமா?

எல்னினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் சின்ன பயன் என்று அர்த்தம். இது ஒரு இயற்கை சூழலாகும். இந்த இயற்கை சூழலில் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த வெப்பம் விவசாயத்தை சார்ந்த தெற்குஆசிய நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  பசிபிக் பெருங்கடலில் இருக்கும் காற்றின் திசைகள் எல்னினோ உருவாகியிருப்பதை தெரிவிப்பதாக ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்க வரை உள்ள சர்வதேச வானிலை முன்னறிவிப்பாளர்கள் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுகிறார்கள். எல்நினோ குறிப்பாக நெல், கரும்பு  மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பங்கு சந்தைகளில் மற்றும் கமாடிட்டி சந்தைகளில் இருக்கும் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. சந்தைகைளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற சர்வதேச வானிலை முன்னறிவிப்பாளர்களின் எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்திய வானிலை ஆய்வாளர்களின் கூற்றில் உண்மையிருந்தாலும், சர்வதேச வானிலை முன்னறிவிப்பாளர்கள் கொடுத்த எச்சரிக்கையை புறம்தள்ளக் கூடாது.    
 
2009ஆம் ஆண்டு எல்னினோ பருவ மழையை பாதித்தபொழுது இந்தியாவில் போதுமான உணவு தானியங்கள் கையிருப்பிருந்தும் திடீர் என்று உணவு பொருட்களின் விலைவாசி அதிகரித்து உணவு பணவீக்கம் உயர்ந்தது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களின் சதவிகிதங்களை உயர்த்தி வைத்திருக்கும் சூழலேயிருந்தது. (2009 ல் வலுவற்ற மழைப்பொழிவு சர்வதேச சந்தையில் சர்க்கரை பொருட்களின் விலையில் 10  வருடத்தில் இல்லாத அளவிற்கு உயர்வை ஏற்படுத்தியது. சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது நாடகயிருக்கும் இந்தியாவில் இந்த ஆண்டு இதன் விலை ஏற்கனவே உயர தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.)  
   
எல் நினோ இந்திய கோடை காலத்தில்  (தென் துருவ குளிர்காலத்தில்) 70 சதவிகிதம் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்திருக்கிறது. எல் நினோ சூழல் ஒவ்வொரு தடவையும் மூன்று வருடத்திலிருந்து ஏழு வருடத்திற்குள் உருவாகி ஒரு வருட காலத்திற்கு நீடித்திருக்கும். இந்த முறை எல் நினோ கடந்த முறைகளை விட  அதிகமான வெப்பத்தை பூமியில் உருவாக்கும் என்று மேற்கத்திய ஆய்வாளர்கள்  எதிர்பார்க்கிறார்கள்.
 
வழக்கமானதை விட பருவமழை குறைவாக இருந்தால், கரும்பு, நெல் மற்றும் பருப்பு வகைகள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதனால் எல்னினொவால் பருவ மழை பொய்த்தாலோ அல்லது குறைந்தாலோ இந்தியாவில் பயிர்வகைகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டு அதன் விலைகள் அதிகரிக்கலாம். அதே சமயம் கிராமங்களில் பணபுழக்கம் குறைவாக இருக்கும் என்பதால் பொருட்களில் வர்த்தகம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் நிறுவனங்களில் லாபம் குறைந்து பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார் ஐஃபின் நிறுவனத்தின் சீனியர் டீலர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ