Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரமாகும் தங்கக் கடத்தல்கள்!

தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சமீப வருடங்களில் 
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரப்படுவதும் அதிகரித்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. 
 
நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த தங்க இறக்குமதிக்கு சில கட்டுபாடுகளை விதித்தது மத்திய அரசு. இதன் காரணமாக தங்கத்தை முறையான வழிகளில் கொண்டு வருவது குறைந்து, பல்வேறு வழிகளில் இந்தியாவிற்குள் தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்துள்ளது என்கிறது அந்த புள்ளிவிவரங்கள்.  
 
தங்கத்தை கடத்துவதில் புதுப் புது நூதனமான வழிகளையும் இதற்கு கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமானது. தங்கத்தை கடத்துவதில் ஒரு நூதன வழியாக மெகந்தி வடிவில் கொண்டுவருகிறார்களாம். தங்கத்தை பொடியாக்கி கைகளுக்கு இடும் மெகந்தியுடன் கலந்து இந்தியாவுக்குள் கொண்டு வந்து விடுகிறார்களாம். தவிர வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீட்சை பழங்களில் உள்ளிருக்கும் விதையை எடுத்துவிட்டு அதே வடிவில் தங்க கட்டிகளை வைத்து கடத்துவதும், பெல்ட் பஹ்னெட்டுகள் வடிவில் தங்க கட்டிகளை வடிவமைத்து அதன் மேல் மெட்டாலிக் ஃபினிஷிங் கொடுத்து மறைக்கப்பட்டும் கடத்தல் தங்கத்தை இந்தியாவிற்குள் கொண்டு வருவது அதிகரித்துள்ளது.  
 
 
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த கடத்தல் விகிதம் பல மடங்கு அதிகரித்துளது. 2011 - 12 ம் ஆண்டில் 
16 கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது. இதுவே 2012 - 13 ம் ஆண்டில் 40 வழக்குகளும், 2013 - 14 ஆம் ஆண்டில் 146 வழக்குகளும் பதிவாகியுள்ளது. முறையே 2011 - 12ல் கடத்தப்பட்ட தங்கத்தில் மதிப்பு 16 கோடி என்றால் 2012 - 13 ல் 44.8 கோடியாகவும், 2013 - 14 ல் 243 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இந்த கடத்தல் வழக்குகள் தொடர்பாக 2013 - 14 ஆண்டில் மட்டும் 255 நபர்கள் கைது செய்யப்படுள்ளனர். 2012 - 13ல் 30 நபர்களும், 2011 - 12 ல் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அந்த விவரம் தெரிவிக்கிறது.  
 
தங்கக் கடத்தலை தடுக்க மத்திய அரசு கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொண்டாலும் பக்கத்து நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், ஸ்ரீலங்கா வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகிறதாம். 
 
இந்த மாத தொடக்கத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரிசர்வ வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன், ‘‘
தங்கத்தின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இதை தடுக்கலாம் என்றும், இது 
தொடர்பாக அரசிடம் விவாதிக்க இது சரியான நேரம்’’ என்றும் தெரிவித்திருந்தார்.
 
தங்க இறக்குமதி கொள்கையில் இருக்கும் தெளிவில்லாத தன்மைதான், இந்த நிச்சயமற்ற சூழலை உருவாக்குகிறது. இது தொடர்பாக விதிகளை தளர்த்தும்போது நேர்மையான வழிகளில் தங்க இறக்குமதி நடக்கலாம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ