Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் தொடர் வீழ்ச்சி!

கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்க விகிதம் ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 5.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால்அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 60.30 ரூபாயாக குறைந்துள்ளது. இதையடுத்து இன்று (15-04-2014) காலை சரிவுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் சரிவிலேயே உள்ளன. மும்பை பங்கு சந்தையி சென்செக்ஸ் 181 புள்ளிகள் குறைந்து 22,447 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 53 புள்ளிகள் குறைந்து 6,723 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக வங்கி துறை பங்குகள் சரிவில் காணப்படுகின்றன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பாங்க் ஆப் பரோடா போன்ற வங்கி பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும், சன் பார்மா, அதானி பவர் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது.   
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP