Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 17 புள்ளிகள் ஏற்றம்!

கடந்த ஏழு மாதத்தில் இல்லாத அளவுக்கு மொத்த பணவீக்க விகிதம் அதிகரித்ததையடுத்து நேற்று இந்திய பங்கு சந்தைகள் சரிவை கண்டன. இதையடுத்து இன்று (16-04-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.25 ரூபாயாக சற்று குறைந்துள்ளது. இதேபோல் இந்திய பங்கு சந்தைகளும் அதிகளவு மாற்றம் இல்லாமல் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 17 புள்ளிகள் அதிகரித்து 22,502 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து 6,743 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக வங்கி துறை பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. பாங்க் ஆப் பரோடா மற்றும் அதானி பவர் போன்ற வங்கி மற்றும் நிறுவன பங்கின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும்,  பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ