Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீராம் கேப்பிடலில் 20% பங்குகளை வாங்கியது பிரமல் எண்டர்பிரைசஸ்

இன்றைய தினம் பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதமும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் 4 சதவிகிதமும் உயர்ந்து இருக்கிறது. இதற்கு காரணம், பிரமல் நிறுவனமானது  ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனத்தின் பங்குகளில் 20 சதவிகித பங்குகளை 2014 கோடிக்கு வாங்கியுள்ளது என்ற அறிவிப்பால் தான்.
 


ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனம் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஹோல்டிங் கம்பெனி ஆகும். பிரமல் நிறுவனம் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிறது.300 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டைக் கொண்டுள்ள ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனம் தனது முதலீட்டில் சில சதவிகித பங்குகளை விற்கலாம் என முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீராம் கேப்பிட்டல் பங்குகளில் கணிசமான முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் வங்கித் துறையில் ஈடுபட விரும்புகிறது பிரமல் நிறுவனம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ