Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏப்ரல் - செப்டம்பர் 2014: சென்னையில் ஐ.டி, எஃப்.எம்.சிஜி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உயரும்..

 ஏப்ரல் - செப்டம்பர் 2014: சென்னையில் ஐ.டி, எஃப்.எம்.சிஜி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உயரும்..

இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு நிறுவனமான டீம்லீஸ் அடுத்த அரையாண்டில் (ஏப்ரல் - செப்டம்பர் 2014) வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்று அண்மையில் ஒர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 
 
டீம்லீஸ் இணை நிறுவனர் மற்றும் மூத்த தலைவர் ரிதுபர்ண சக்ரபர்த்தி, ‘‘இந்தியாவில் கடந்த அரையாண்டோடு (அக்டோபர் 2013- மார்ச் 2014) ஒப்பிடும்போது, அடுத்த ஏப்ரல் - செப்டம்பர் 2014 ல்  வேலைவாய்ப்பு வளர்ச்சி சுமார் 5 சதவிகிதம் இருக்கும். மேலும் இதற்கு காரணம் வரும் நாடாளுமன்ற தேர்தல், புதிய ஆட்சி புதிய கொள்கை வரலாம். இதனால் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையலாம். இதனால் தொழில் துறை வளர்ச்சி அடையலாம் என்றும், இதன் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.’’ 
 
 
 
வேலைவாய்ப்பு உள்ள நகரங்கள்!
 
வேலைவாய்ப்பில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில், மும்பையில் 4 சதவிகித வேலை வாய்ப்பும், பெங்களூருவில் 5 சதவிகித வேலை வாய்ப்பும், அகமதாபாத்தில் 4 சதவிகித வேலை வாய்ப்பும் அதிகரிக்கலாம். 
 
வளர்ச்சி அடையும் துறைகள்!
ஹெல்த்கேர் மற்றும் மருந்து துறைகளில் வேலை வாய்ப்பில் 5 சதவிகித வளர்ச்சியும், ஃபைனான்ஷியல் சர்வீசஸ் துறையில் 4 சதவிகித வேலைவாய்ப்பு வளர்ச்சியும் இருக்கும். 
 
துறை சார்ந்த வேலைவாய்ப்பு வளர்ச்சியும் நகரங்களும்?
 
அடுத்த அரையாண்டில் (2014 ஏப்ரல் - செப்டம்பர் ) வேலைவாய்ப்பு எந்த மாநிலத்தில் எத்தனை சதவிகிதம் வளர்ச்சி இருக்கும்?  
 
டெலிகாம் துறையில் 3 சதவிகித வேலைவாய்ப்பும், ஹெல்த்கேர் மற்றும் பார்மா துறைகள் 2 சதவிகித வேலைவாய்ப்பு, ஃபைனான்ஷியல் துறை மற்றும் ஐ.டி துறையில் 1 சதவிகித வேலைவாய்ப்பும் இருக்கலாம். 
 
டெல்லி: உள்கட்டமைப்பு, உற்பத்தி துறை, பொறியியல் துறை, ஹெல்த்கேர் மற்றும் பார்மா உள்ளிட்ட துறைகளில் 2 சதவிகித வேலைவாய்ப்பு வளர்ச்சியும் இருக்கலாம். 
 
பெங்களூரு: ஐ.டி துறையில் 3 சதவிகித வேலைவாய்ப்பும், ஃபைனான்ஷியல் சர்வீஸஸ், உள்கட்டமைப்பு துறை, ஹெல்த்கேர் மற்றும் பார்மா துறைகள் தலா 2 சதவிகித வேலைவாய்ப்பு வளர்ச்சியும் இருக்கலாம். 

சென்னை: ஐ.டி, சில்லறை மற்றும் எஃப்.எம்.சி.ஜி, உற்பத்தி மற்றும் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் 2 சதவிகித வேலை வாய்ப்பு வளர்ச்சியும் இருக்கலாம். 
 
கொல்கத்தா: உற்பத்தி மற்றும் பொறியியல் துறையில் 2 சதவிகித வேலைவாய்ப்பும், சில்லறை மற்றும் எஃப்.எம்.சி.ஜி, ஐ.டி போன்ற துறைகளில்  1 சதவிகித வேலைவாய்ப்பும் இருக்கலாம். 

புனே: உள்கட்டமைப்பு துறையில் 2 சதவிகித வேலைவாய்ப்பும், ஹெல்த்கேர் மற்றும் பார்மா, ஃபைனான்ஷியல் சர்வீசஸ் துறைகளில் தலா 1 சதவிகித வேலைவாய்ப்பும் இருக்கலாம். 
 
ஹைதராபாத்: ஐ.டி மற்றும் அதைச் சார்ந்த துறை, சில்லறை மற்றும் எஃப்.எம்.சி.ஜி, ஹெல்த்கேர் மற்றும் பார்மா துறைகள் தலா 1 சதவிகித வேலைவாய்ப்பு வளர்ச்சியும் இருக்கலாம். 
 
அகமதாபாத்: ஐ.டி துறையில் 3 சதவிகித வேலைவாய்ப்பும், சில்லறை மற்றும் எஃப்.எம்.சி.ஜி, உள்கட்டமைப்பு துறைகளில் 2 சதவிகித வேலைவாய்ப்பும் இருக்கலாம்.  
 
பணியமர்த்துதல்! 
தற்போது பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கிறது. இதனால் அடுத்த 6-12 மாதங்களில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி வேலைவாய்ப்பில் இருக்கலாம். மேலும் அடுத்த அரையாண்டில் வேலையாட்களை பணியமர்த்துவதில் ஐ.டி துறையில் 3 சதவிகிதம் அதிகரிப்பதோடு, டெலிகாம் துறையிலும் 3 சதவிகிதம் பணியமர்த்துவது அதிகரிக்கலாம். இதுவே உற்பத்தி மற்றும் பொறியியல் துறைகளில் பணியமர்த்துவது 2 சதவிகிதம் குறையலாம். ஐ.டி மற்றும் துறை சார்ந்த பகுதிகளில் 1 சதவிகிதமும் பணியமர்த்துவது குறையலாம் என்கிறார்’’. 
 
-சே.புகழரசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP