Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசியா விமானம் எம்.ஹெச்.370: தேடுதல் பணிக்கு சுமார் 600 கோடி!

கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி உலக நாடுகள் அனைத்தும் தன் பார்வையை மலேசியாவின் மீதி செலுத்தியது. காரணம் மலேசியா விமானமான எம்.ஹெச்.370 பயணம் செய்த 239 பயணிகளுடன் மாயமாய் மறைந்ததுதான். அந்த விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம், மலேசியா மீது பகை கொண்ட நாடுகள் விமானத்தை கடத்தி இருக்கலாம் அல்லது விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்றெல்லாம் பரவலாக பேசப்பட்டு வந்தன.

மனம்தளராத மலேசிய அரசாங்கம் தீவிரமாக தேடுதல் பணியில் இறங்கியது. இதற்கு இடையில், விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரிடமிருந்து குறுந்தகவல் வந்தது, விமானத்திடமிருந்து சமிஞ்சைகள் பெறப்பட்டது என்கிற தகவல்களால் தேடுதல் பணியானது தீவிரமடைந்தது.

விமானத்தில் பயணம் செய்தவர்களை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று மலேசியா அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா, சீனா போன்ற நாடுகளும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. இன்றும் தேடுதல் பணியாது தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்த தேடுதல் பணிகளுக்காக மட்டும் மலேசியா அரசாங்கம் செலவு செய்திருக்கும் தொகை 100 மில்லியன் டாலர்களாம் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 600 கோடி)! அடேங்கப்பா..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close