Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக் - லாபம் அள்ளிய ஐ.டி நிறுவனங்கள்!

 
''வெயில் தாங்க முடியவில்லை. கத்திரி ஆரம்பித்தவுடன் ஏதாவது ஒரு மலைவாசஸ்தலத்துக்கு ஒரு பத்து நாள் போய்வந்தால்தான் தப்பிக்க முடியும்!'' கேபினுள் நுழைந்தவுடன் இப்படி சொன்னவருக்கு, சில்லென்று ரோஸ்மில்க் கொடுத்து வரவேற்றோம். ''சென்செக்ஸ் புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதே?'' என்று கேட்டோம். உண்மைதான். 2008 - 2013-ல் இந்திய பங்குச் சந்தை கிட்டத்தட்ட ஒரேநிலையில் இருந்துள்ளது. இந்த நிலை மாறி 2014-ல் இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை அடையப் போவதோடு, முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தையும் கொடுக்கப்போகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சென்செக்ஸ் 35000-40000-க்கு போய்விடும் என்பதில் பல அனலிஸ்ட்கள் உறுதியாக இருக்கிறார்கள். சந்தை தற்போது அடுத்தகட்டமாக 28500 புள்ளிகளை நோக்கி செல்ல இருக்கிறது. இந்த நிலை 2015 ஜூலையில் வர அதிக வாய்ப்புகள் உள்ளன'' என்றார். ''நல்ல விஷயம்தான். இந்தியச் சந்தையில் எஃப்ஐஐகளின் நிலைமை எப்படி இருக்கிறது?'' என்று கேட்டோம். நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவு உள்ளிட்ட பொருளாதாரக் குறியீடுகள் சாதகமாக இருப்பதால் அண்மை வாரங்களில் இந்திய பங்குச் சந்தையில் எஃப்ஐஐகளின் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. வங்கி, மூலதனப் பொருட்கள், மின்சாரம் ஆகிய துறை நிறுவனங்களில் பங்கு மூலதனத்தை எஃப்ஐஐகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இந்த் பேங்க், எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எல் அண்ட் டி, கிராம்ப்டன் கிரீவ்ஸ், தெர்மேக்ஸ் நிறுவனப் பங்குகளில் எஃப்ஐஐகளின் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஐ.டி நிறுவனங்களான டெக் மஹிந்திரா, எம்பசிஸ், எஃப்எம்சிஜி நிறுவனங்களான ஹெச்யூஎல், டாபர் பங்குகளில் எஃப்ஐஐ முதலீடு குறைந்திருக்கிறது.

இதேபோல, சிறு முதலீட்டாளர்களின் முதலீடும் பங்குச் சந்தையில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. மார்ச் மாதத்தில் ரொக்கச் சந்தையில் ஈக்விட்டி பிரிவில் சிறு முதலீட்டாளர்களின் தினசரி சராசரி டேர்னோவர் 32.1% அதிகரித்து, ரூ.7,540 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எஃப் அண்ட் ஓ பிரிவிலும் வர்த்தகம் 17.3% அதிகரித்து ரூ.65,470 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2013 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு மிகவும் அதிகமாகும் என்கிறார்கள்'' என்று சொன்னார் மகிழ்ச்சி பொங்க.

''பங்குச் சந்தை மட்டுமல்ல, கடன் சந்தையும் மேம்பட ஆரம்பித்திருக்கிறது போலிருக்கிறதே?'' என்றோம் நாமும் சந்தோஷமாக.

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ