Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயற்கை எரிவாயுவிற்கான தேவை 55% அதிகரிக்கும்

இந்தியாவில், இயற்கை எரிவாயுவிற்கான தேவைப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதற்கான தேவை 55 சதவீதம் அதிகரிக்கும் என அண்மையில் வெளியான ஆய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன.
 
 
இதன் படி, கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் எரிவாயுவிற்கான தேவை நாள் ஒன்றுக்கு 24.27 கோடி கனமீட்டராக இருந்தது. இதுவே 2016–17–ஆம் ஆண்டில் தேவைப்பாடு 55 சதவிகிதம் உயர்ந்து நாள் ஒன்றுக்கு 37.81 கோடி கனமீட்டராகவும், 2021–22–ல் 51.70 கோடி கனமீட்டராகவும், 2026–27–ல் 21.10 கோடி கனமீட்டராகவும் அதிகரிக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
 
உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தேவையை ஈடு செய்யும் அளவிற்கு  தற்போது இல்லை. 2012–13–ஆம் ஆண்டில் எரிவாயு உற்பத்தி நாள் ஒன்றுக்கு 10.11 கோடி கனமீட்டராக இருந்தது. இதுவே 2021–22–ல் உற்பத்தி 18.20 கோடி கனமீட்டராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதே காலகட்டத்தில் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி நாள் ஒன்றுக்கு 4.46 கோடி கனமீட்டரிலிருந்து 18.80 கோடி கனமீட்டராக அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ