Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாருதி சுசுகி நிகர லாபம் ரூ.800 கோடி

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி – மார்ச்) எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 35.46 சதவிகிதம் குறைந்துள்ளது.
 
 
 
இந்நிறுவனம், மார்ச் காலாண்டில் ரூ.800.05 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,239.62 கோடியாக இருந்தது. விற்பனை சரிவு, அதிக செலவினங்கள் போன்ற காரணங்களால் நிகர லாபம் குறைந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் நிகர வருவாய் குறைந்து ரூ.13,056 கோடியிலிருந்து ரூ.11,818 கோடியாக குறைந்துள்ளது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 5.48 சதவிகிதம் குறைந்து 3.44 லட்சத்திலிருந்து 3.25 லட்சமாக குறைந்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ