Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 100 புள்ளிகள் வீழ்ச்சி.

இந்திய சந்தை பங்குச் சந்தைகள் இன்று (29.04.2014)காலை இறங்கு முகத்தில் துவங்கியது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் காலை 10.15 மணியளவில் 104 புள்ளிகள் சரிந்து 22527 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 29 புள்ளிகள் குறைந்து 6731 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
ஐடியா பங்கு மூன்று சதவிகிதம் விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. அதே நேரத்தில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. மேலும் டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி. , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், ஐ.டி.சி., எல் அண்ட் டி பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 60.54 என்ற நிலையில் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ