Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய மாம்பழத்திற்கு தடை:

இந்தியாவில் விளையும் அல்போன்சா மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டில் இறக்குமதியான மாம்பழங்கள், காய்கறிகளின் மொத்த அளவில் 6 சதவிகிதம் பூச்சித் தாக்குதல் இருந்ததாக ஐரோப்பிய யூனியன் சுகாதார மையம் அறிக்கை அளித்தது.அதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து மாம்பழம், பாகற்காய், புடலங்காய் ஆகியவற்றை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிகத் தடை விதித்துள்ளது.



 

இது வருகிற 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இந்திய மாம்பழ இறக்குமதியை அனுமதித்துள்ளன.இதைச் சுட்டிக்காட்டி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், இந்தியர்கள் இந்தத் தடைக்கு எதிராக போராடத் தயாராகி வருகின்றனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ