Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஃபே தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு பத்மஸ்ரீ விருது !

தொழில் மற்றும் வணிகத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக டாஃபே குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
 
 
இது குறித்து மல்லிகா ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி என்னை கவுரவித்து குறித்து நான் பெரிதும் பெருமையடைகிறேன். ஒரு உள்நாட்டு கம்பெனியாக இருந்ததை இன்று பெரிய அளவில் தயாரிக்கும் உற்பத்தித்திறன் கொண்ட கம்பெனியாக கருதப்படும் அளவிற்கு, மனித மதிப்பீடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு மாபெரும் கூட்டமைப்பாக நடப்பு அந்தஸ்து நிலைக்கு உயர்த்திய முன்னாள் மற்றும் இந்நாள் டாஃபே குழுவினர்களின் அயராத உழைப்பிற்கு நான் இந்த விருதினை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,” மேலும் இந்திய தொழில்முனைவும், பொறியியல் துறையும் சர்வதேச அளவுக்கு தகுதித்திறன் பெற்று வளர்ச்சியடைந்துள்ளது என்றும், உலகச் சந்தைகளுக்கு தயாரிப்பு பொருட்களை வழங்குவதற்குரிய செய்முறைகளிலும் மற்றும் உரிய தொழில்நுட்பத்திலும் நாம் முதலீடு செய்ய வேண்டியது ஒன்றே நம்முடைய எஞ்சிய கடமையாகும்,” என்றும் அவர் மேலும் கூறினார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ