Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோக்கியா நிறுவனம் 240 கோடி வரி செலுத்த உத்தரவு?

நோக்கியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நாங்கள் தயாரிக்கும் செல்போன்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் இருந்தால் அதற்கு வாட் என்ற மதிப்பு கூட்டு வரி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. 
 
 
கடந்த 2009&-2010ம் ஆண்டு, 2010&-2011ம் ஆண்டு 2011-&2012ம் ஆண்டு ஆகிய 3 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி செய்யாத பொருட்களுக்கு 4 சதவிகித வாட் வரி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசின் வணிவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக 2400 கோடி மதிப்பு கூட்டு வரி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், ‘நோக்கியா நிறுவனம் மொத்த தொகையான 2,400 கோடியில் 10% வரியான 240 கோடியை 8 வாரத்தில் அரசுக்கு செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ