Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் வீழ்ச்சி!

இன்று காலை (30-04-2014) ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள், முடிவில் சரிவில் முடிவடைந்தன. நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுத்து செல்லும் நிலை உள்ளது. மேலும் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடும் வெளியேற வாய்ப்புகள் உள்ளது. இதையடுத்து மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 48 புள்ளிகள் குறைந்து 22,417 ஆக முடிவடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி 18 புள்ளிகள் குறைந்து 6,696 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக ஃபைனான்ஷியல் டெக் நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் குறைந்தும், பார்தி ஏர்டெல் மற்றும் டாடா பவர் நிறுவன பங்கின் விலை தலா 3 சதவிகிதம் குறைந்தும், சன்பார்மா நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ