Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.வி.எஸ் மோட்டார் நிகரலாபம் 58% அதிகரிப்பு!

வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலண்டில் அதன் நிகர லாபம் 58 சதவிகிதம் அதிகரித்து 52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய காலாண்டில் இதே காலாண்டில் 33 கோடி ரூபாயாக இருந்தது. 
 
 
இதே நான்காவது காலாண்டில் விற்பனை 21 சதவிகிதம் அதிகரித்து, 2,156 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,775 கோடி ரூபாயாக விற்பனை இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வருவாய் 11 சதவிகிதம் அதிகரித்து, 7,962 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 7,169 கோடி ரூபாயாக இருந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ