Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் ரூ.74,985 கோடிக்கு பங்குகளை வாங்கின. அதே நேரத்தில் ரூ.65,383 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தன. ஆக நிகர முதலீடு ரூ.9,602 கோடியாக உள்ளது.
 
 
நடப்பு ஆண்டில் இது வரை அந்நிய நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு ரூ.32,377 கோடியாக உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.20,077 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளன. ஆனால் இதுவே ஜனவரியில் ரூ.714 கோடியும், பிப்ரவரியில் ரூ.1,404 கோடியும் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது.
 
பங்குகளில் முதலீட்டை அதிகரித்துள்ள இதே வேளையில் கடன்பத்திரங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டை அன்னிய நிதி நிறுவனங்கள் வெளியே எடுத்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.9,185 கோடிக்கு கடன்பத்திரங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ