Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிகர லாபம் ரூ.267 கோடி

ரிலையன்ஸ் கேப்பிட்டல் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிகரலாபமாக 267 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.265 கோடியாக இருந்தது. 
 
 
மொத்த வருவாய் ரூ.1,691 கோடியிலிருந்து ரூ.1,848 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் முதலீட்டு ஆலோசனை, பரஸ்பர நிதி திட்டங்கள், பங்கு தரகு, ஆயுள் மற்றும் பொதுக்காப்பீடு ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.
 
2013-14ம் நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.747 கோடி ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 9 சதவிகிதம் குறைவாகும். மொத்த வருவாய் ரூ.6,636 கோடியிலிருந்து ரூ.7,544 கோடியாக உயர்ந்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ