Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மினிமம் பேலன்ஸ் அபராதம் : ஆர்பிஐ புதிய அறிவிப்பு

சாதாரண மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச வைப்புத்தொகையைப் பராமரிக்காமல் போனால், எந்த அபராதமும் விதிக்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது
 


 

தற்போது பெரும்பாலான வங்கிகள் குறைந்தபட்ச வைப்புத்தொகையைக் கறாராகப் பராமரிக்க வேண்டும் என்று சொல்லி வருகின்றன. காசோலை வசதியுடன் கூடிய கணக்குகளுக்கு ரூ.1000-மும் காசோலை வசதி இல்லாத கணக்குகளுக்கு ரூ.500-ம் குறைந்தபட்ச வைப்புத்தொகையாக பொதுத்துறை வங்கிகள் நிர்ணயம் செய்திருக்கின்றன. இந்த அளவை எல்லோரும் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், வங்கி சொல்லும் குறைந்தபட்ச வைப்புத்தொகை, கணக்கில் திரும்ப வைக்கப்படுகிறவரை வாடிக்கையாளர் மீது அபராதம் விதிக்கின்றன பல வங்கிகள். இந்த அபராதம் பொதுத்துறை வங்கிகளில் ஒரு மாதத்துக்கு 30 ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது.

சாதாரண மக்கள் அவசரச் செலவு காரணமாகத்தான் இந்தக் குறைந்தபட்ச வைப்புத்தொகையை எடுக்கின்றனர். அதையும் எப்போதாவதுதான் செய்கின்றனர். இதற்காக அவர்கள் மீது அபராதம் போட வேண்டுமா? அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வங்கி அளித்துவரும் சில வசதிகளை நிறுத்தலாம் என்று யோசனை சொல்லியிருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.

ஆனால், மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த யோசனைக்கு வங்கித் தரப்பில் விரிவான விளக்கம் தருகிறார்கள் அதிகாரிகள். குறைந்தபட்ச இருப்புத்தொகை என்பது ஒரு கணக்கை பராமரிக்க ஆகும் செலவுத்தொகை. ஒரு நயா பைசாவையும் வாங்காமல், ஒரு கணக்கை பராமரிப்பது என்பது எப்படி சாத்தியம்? தவிர, குறைந்தபட்ச இருப்புத்தொகை என்பது வங்கிக்கு வங்கி, நகரம், கிராமம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்த நிலையில் சேவைகளைக் குறைப்பது மட்டும் சரியான தீர்வாக இருக்குமா என்று கேட்கிறார்கள்.
 

இந்நிலையில் நேற்று பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத பட்சத்தில், அதற்காக வாடிக்கையாளருக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்க கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்திலேயே ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP