Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி கடனை திரும்ப தராத நிறுவனங்கள்: பட்டியலை வெளியிட்டது வங்கி ஊழியர் சங்கம்

வங்கிகளில் நாடு முழுவதும் ரூ 75 லட்சம் கோடி ரூபாய் வைப்பு தொகையாக உள்ளது.இந்த தொகையை தான் வங்கிகள் கடனாக வழங்கி வருகின்றன. இதனை கோடிக் கணக்கில் பெற்ற பெரிய நிறுவனங்கள் திரும்ப செலுத்தாமல் இருந்துவந்தன. அதில் சுமார் 70,300 கோடி மதிப்புள்ல கடனை திரும்ப செலுத்தாத 406 நிறுவனங்களின் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

 



கடன் கட்டாமல் ஏமாற்றி வரும் நிறுவனங்களை அடையாளம் காட்டவும், வாரக்கடனை வசூலிக்கவும் இந்த பட்டியலை அறிவித்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் அடுத்தகட்டமாக 1 கோடிக்கும் அதிகமாக கடன் செலுத்தாமல் இருக்கும்  ஏழாயிரம் பேரின் பெயர்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ