Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் ஒரே நாளில் 650 புள்ளிகள் ஏற்றம்!

இன்று காலை (09-05-2014) ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் முடிவிலும் ஏற்றத்திலே முடிவடைந்தன. சீனா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளின் பணவீக்க விகிதம் குறித்த குறியீடு சாதகமாக இல்லாததையடுத்து அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடுகள் இந்திய பங்கு சந்தைகளில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் ஆதலால் இந்திய பங்கு சந்தைகள் இதுவரை இல்லாத அளவு உயர்ந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 650 புள்ளிகள் அதிகரித்து 22,994 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 198 புள்ளிகள் அதிகரித்து 6,858 ஆக முடிவடைந்தது.
 
 
இதையடுத்து டி.வி.எஸ் மோட்டார் நிறுவன பங்கின் விலை 6 சதவிகிதம் அதிகரித்தும், பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் பேங்க் பங்கின் விலை 4 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ