Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏன் வேண்டும் குடும்ப நிதி ஆலோசகர்?

 
சேமிப்பு, நிதி திட்டமிடல் குறித்த தெளிவு அதிகரித்து வருவது ஒரு வகையில் சிறப்பானதுதான் என்றாலும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தெளிவு இல்லை என்று சொல்லிவிடலாம். நாமும் சேமித்தோம் என்று பெயரவிற்கு சேமிக்கிறார்கள். காய்ச்சல் வந்தால் மருந்து கடையில் மருந்து வாங்குவதைப் போல தங்களுக்கு தெரிந்த வகையில் நிதி திட்டமிடுதலை மேற்கொள்கிறார்கள். இது தவறான நடைமுறை. குடும்ப மருத்துவர், குடும்ப வழக்கறிஞர் போல குடும்பத்திற்கு என்று நிதி ஆலோசகரையும்  வைத்துக் கொள்ள வேண்டும். என்கிறார் நிதி ஆலோசகர் சீனிவாசன். 
 
பொதுவாக நிதி ஆலோசகர்கள் தன்னிடம் ஆலோசனை கேட்டு வருகிற ஒருவருக்கு, அவரது வருமானம் மற்றும் செலவுகள் அடிப்படையிலும், வாழ்க்கை தர வசதிகளை முன்வைத்தும் பொதுவான ஒரு திட்டத்தைதான் முன்வைப்பார்கள். அப்படி இல்லாமல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிதி ஆலோசனையை செழுமைப்படுத்தும் அக்கறை கொண்ட நிதி ஆலோசகர்களை குடும்ப நிதி ஆலோசகர்கள் என்கிறேன். அதாவது ஃபேமிலி டாக்டரை போன்று ஃபேமிலி ஃபைனாஷியல் பிளானர் என்றவர், அப்படியான ஃபனான்ஸியல் பிளானரை எப்படி தேர்வு செய்து கொள்வது என்பதையும் விளக்கினார். 
 
பிளான் பண்ணிய காலத்திற்கு பிறகு நமது வருமானம் அதிகரிக்கலாம், கடன் அதிகரிக்கலாம், அல்லது திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கலாம். இவற்றை அப்டேட் செய்து அதற்கேற்ப அலோசனைகள் கொடுப்பதுதான் முழுமையான நிதி ஆலோசனை. இந்த வேலையைத்தான் நிதி ஆலோசகர்கள் செய்யவேண்டும். தெரிந்த ஒரு நிதி ஆலோசகரை மட்டும் பார்த்துவிட்டு, உடனே அவரிடம் பிளான் வாங்கி விடக்கூடாது. குறைந்தபட்சம் மூன்று நிதி ஆலோசகர்களையாவது சந்தித்து, அதற்கு பிறகு நம்பிக்கையான நிதி ஆலோசகரை தேர்வு செய்யலாம். 
 
நிதிஆலோசகராக பணியாற்ற கல்வித்தகுதி அவசியம். மேலும் முறையான பதிவு பெற்றவரா, சி.எஃப்.பி அல்லது சி.பி.எஃப்.ஏ போன்ற நிதி ஆலோசனை சார்ந்த கல்வி கற்றிருக்க வேண்டும். நிதி ஆலோசனை செய்கிறேன் என்று வருமான வரி ஆலோசனை சொல்கிறவர்கள், காப்பீடு முகவர்கள், ஆர்டி முகவர்கள் சிலரும் நிதி ஆலோசகர்கள் செயல்படுவார்கள் . இவர்கள் நிதி ஆலோசகர்கள் கிடையாது. நமது எந்த லாப நஷ்டத்துக்கும் இவர்களிடம் தெளிவான பதில் இருக்காது. சில இடங்களில் இன்ஷூரன்ஸ், பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை விற்கும் ஏஜெண்டுகளே நிதி ஆலோசகராகவும் இருப்பார். இவர் விற்கும் திட்டங்கள்தான் சிறந்த வருமானத்தை தரும் என்று அதையே விற்பதற்கு முயல்வார்கள். இவர்களிடம் நல்ல ஆலோசனை கிடைக்கும் என்று நம்ப வேண்டாம். 
 
 
ஆலோசனை சொல்வதில் வல்லவராக இருந்தால் மட்டும் போதாது, அதற்கு சரியான வகையில் கணக்கு வழிமுறைகள் சொல்பவராக இருக்க வேண்டும். எளிமையான  வழிமுறையாக இருக்க வேண்டும். தவிர எனக்கு என்ன தேவை என்று நீங்கள் சொன்ன பிறகும், உங்கள் தேவைகள் தாண்டி அவரது கருத்துக்களை உங்கள் மேல் திணிக்கிறாரா என்பதையும் பாருங்கள். அதாவது நமது தேவைக்கு ஏற்ப ஆலோசனை கொடுப்பவர் தான் சிறந்த நிதி ஆலோசகராக இருக்க முடியும். அவரது விருப்பத்தை நம்மிடம் திணிக்க கூடாது.  இந்த அடிப்படையில் ஒரு நிதி ஆலோசகரை தேர்ந்தெடுத்துக் கொள்வடும், அவரை நமது குடும்ப நிதி ஆலோசகராக அமர்திக் கொள்வதும் எதிர்கலாத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும்.
 
நீரை.மகேந்திரன்.
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ