Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் நிஃப்டி புதிய உச்சம்!

நாடளுமன்ற தேர்தல் அறிக்கைகள் குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், ஏதாவது ஒரு
கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடக்கும் என்கிற எதிர்பார்பு இருப்பதாலும், தேர்தலுக்கு பின் நல்லதொரு ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பால் இன்று (12-05-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. இதையடுத்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.81 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 556 புள்ளிகள் அதிகரித்து 23,551 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 155 புள்ளிகள் அதிகரித்து 7,014 ஆக முடிவடைந்தது. 
 
 
குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவன பங்கின் விலை 9 சதவிகிதம் அதிகரித்தும், எம்.சி.எக்ஸ் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் பேங்க்  மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ