Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நுகர்வோர் விலை குறியீடு 8.59% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடு 8.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 8.31 சதவிகிதமாக இருந்தது. மேலும் உணவு பணவீக்கம் குறித்த குறியீடு மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு  9.66 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 9.1 சதவிகிதமாக இருந்தது. 
 
 
கிராமப்புற பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 9.25 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதத்தில் 8.89 சதவிகிதமாக இருந்தது. 
 
இதுவே நகர்புற பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.69 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 7.51 சதவிகிதமாக இருந்தது. இதுவே முக்கிய துறைகளின் பணவீக்கம் மாற்றமில்லாமல் 7.8 சதவிகிதமாக உள்ளது. 
 
குறிப்பாக தொழிற்துறை உற்பத்தி குறித்த குறியீடு &0.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த பிப்ரவரியில் &1.8 சதவிகிதமாக இருந்தது கவனிக்கதக்க விஷயம். மேலும் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த தொழிற்துறை உற்பத்தி குறியீடு நடப்பு ஆண்டில் &0.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு 1.1 சதவிகிதமாக இருந்தது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ