Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம்!

பொதுத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து புதிய அரசு பற்றிய எதிர்பார்ப்பு காரணமாக பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை அடைந்தன. இதையடுத்து இன்று (13-05-2014) தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 59.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 273 புள்ளிகள் அதிகரித்து 23,824 ஆக உள்ளது.  நிஃப்டி 82 புள்ளிகள் அதிகரித்து 7,096 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 7 சதவிகிதம் அதிகரித்தும், ஃபைனான்ஷியல் டெக் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ