Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம், வெள்ளி விலை தொடர் வீழ்ச்சி!

பொதுத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய அரசு பற்றிய எதிர்பார்ப்பு காரணமாக இன்று (13-05-2014) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 59.77 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை தொடர்ந்து விலை குறைந்த வண்ணமே உள்ளது குறிப்பாக இன்று 81 ரூபாய் குறைந்து 28,547 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 169 ரூபாய் குறைந்து, 41,917 ரூபாயாக உள்ளது. 
 
 
இதையடுத்து கச்சாஎண்ணெய் விலை கடந்த சில தினங்களாகவே அதிகளவு மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. மேலும் இன்று 17 ரூபாய் அதிகரித்து 6,010 ரூபாயாக உள்ளது.   
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ