Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வழக்கு பதிவில் தமிழகத்துக்கு முதலிடம்

நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.313 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆந்திராவில் அதிகபட்சமாக ரூ.153 கோடி சிக்கியுள்ளது. கர்நாடகாவில் ரூ.28 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.25.67 கோடியும், தமிழகத்தில் ரூ.25.05 கோடியும், உத்திரபிரதேசத்தில் ரூ.24.07 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
 
 
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 5ம் தேதி அறிவிக்கப்பட்டதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. சுமார் 20,000 தேர்தல் பறக்கும் படை குழுவினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த கிடுக்கிப்பிடி சோதனையால் நேற்று முடிந்த கடைசி கட்ட வாக்குப்பதிவு வரையிலும் சுமார் ரூ.313 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
அதே போல, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம் பட்டியலிலும் ஆந்திராவே முன்னிலை பெற்றுள்ளது. இம்மாநிலத்தில் 1.44 கோடி லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பில் 11.5 லட்சம் லிட்டர், குஜராத்தில் 11.32 லட்சம் லிட்டர், மேற்கு வங்கத்தில் 8.46 லட்சம் லிட்டர் மதுபானம் சிக்கியது. நாடு முழுவதும் மொத்தம் 2.2 கோடி லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
போதை பொருட்களை பொறுத்த வரையில் பஞ்சாப் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தமாக கைப்பற்ற 1.85 லட்சம் கிலோ போதை பொருட்களில் பஞ்சாப்பில் மட்டும் 1.39 லட்சம் கிலோ போதை பொருள் சிக்கியுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறியதாக 75,306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக 13,641 வழக்குகளும், உத்திரபிரதேசத்தில் 13,565 வழக்குகளும் பதிவாகி உள்ளது.
 
இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இம்முறை பணம், மதுபானம், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நாடு முழுவதும் ரூ.190 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது கவனிக்க தக்கவிஷயம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close