Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 24,000 தாண்டியது..........!

இன்று (13-05-2014) காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது 11.50 மணியளவில் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகள் இன்னும் எந்த அளவுக்கு ஏற்றம் இருக்கும், தற்போது வர்த்தகர்கள் எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்று பங்கு சந்தை நிபுணர்களிடம் பேசினோம். 
 
‘‘ பங்கு சந்தையின் சென்செக்ஸ் தற்போது 481 புள்ளிகள் அதிகரித்து 24,032 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 148 புள்ளிகள் அதிகரித்து 7,148 ஆக உள்ளது. தற்போது சந்தையில் பல நிறுவன பங்குகளின் தற்போது தான் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. மேலும் குறிப்பிட்ட சில பங்குகள் ஏற்றம் அடைந்திருந்தாலும் தற்போதும் வாங்கலாம். குறிப்பாக இன்போஸிஸ், விப்ரோ பங்குகளை வாங்கலாம். 
 
 
வங்கி துறை பங்குகளில் கனரா பேங்க், பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற பங்குகளை வாங்கலாம்.
 
இதுவே பவர் துறையில் டாடா பவர், என்.டி.பி.எல் போன்ற பங்குகளை வாங்கலாம்.
 
கேப்பிட்டல் கூட்ஸ் துறையில் பார்தி ஏர்டெல், பி.இ.எம்.எல், எல் அண்ட் டி போன்ற பங்குகளை வங்கலாம். 
 
உள்கட்டமைப்பு துறையை பொறுத்த வரை ஐ.எல் அன்ட் எஃப்.எஸ் டிராஸ்போர்டேஷன் பங்கினை வாங்கலாம்.
 
ஜீவல்லரி துறையை சேர்ந்த டாடா ஸ்டீல், செயில் போன்ற பங்குகளை வாங்கலாம். 
 
ஆயில் & கேஸ் துறையில் ஒ.என்.ஜி.சி, கோல் இந்தியா, என்.எம்.டி.சி போன்ற பங்குகளை வாங்கலாம். 
 
சென்செக்ஸ் நிஃப்டியை பொறுத்தவரை நிஃப்டியின் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 7,455 ஆகும். இதுவே சென்செக்ஸின் அடுத்த ரெஸிஸ்டன்ஸ் லெவல் 25,600 என்கிறார்கள் நிபுணர்கள்’.   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ