Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுத்துறை வங்கிகளில் முதலீடு...

இந்தியாவைச் சேர்ந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டில் வங்கிப் பங்குகளிலும், மற்ற சில பங்குகளிலும் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளது.
 
 
குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் இந்த முதலீடு அதிகரித்துள்ளது. தேனா பேங்கின் பங்கில், கடந்த மார்ச் 2011ம் ஆண்டில் 6.37 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 16.56 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே யூனியன் பேங்கின் பங்கில், கடந்த மார்ச் 2011ல் 3.41 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 11.02 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பங்குகளில், கடந்த மார்ச் 2011ல் 12.22 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 16.51 சதவிகிதமாகவும், யுனைடெட் பேங்கில், கடந்த மார்ச் 2011ல் 0.19 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 4.32 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே பேங்க் ஆப் இந்தியாவின் பங்கில், கடந்த மார்ச் 2011ல் 10.43 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 14.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.   
 
இது தனியார் துறை வங்கிகளில் குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் தங்களது முதலீட்டை அதிகரித்துள்ளது. குறிப்பாக யெஸ் பேங்கில், கடந்த மார்ச் 2011ல் 4.75 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 14.28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. டி.சி.பி பேங்கில், கடந்த மார்ச் 2011ல் 0.03 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 3.81 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கர்நாடகா பேங்கின் பங்கில், கடந்த மார்ச் 2011ல் 3.42 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 
 
வங்கித் துறை தவிர சில பங்குகளிலும் இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை செய்துள்ளன. குறிப்பாக ஐ.ஜி.எல் நிறுவனத்தில், கடந்த மார்ச் 2011ல் 2.82 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 8.87 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில், மார்ச்2011ல் 3.45 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச்2014ல் 8.19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன பங்கில், மார்ச்2011ல் 5.33 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச்2014ல் 11.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இ.ஐ.எல் நிறுவனத்தில், கடந்த மார்ச் 2011ல் 3.62 சதவிகிதமாக இருந்த முதலீடு, மார்ச் 2014ல் 6.76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP