Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பொருளாதாரத்தில் 6.75 சதவிகித வளர்ச்சி ஏற்படலாம்....

அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் ஆண்டுக்கு சராசரியாக 6.75 சதவிகிதம் வளர்ச்சி ஏற்படும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கூறியுள்ளது. 
 
 
மந்தநிலை விலகி வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவது மற்றும் கொள்கையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவது போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 லட்சம் கோடி டாலரை தாண்டும் என இந்நிறுவனம் கூறியுள்ளது. இதுவரை அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த மதிப்பை எட்டியுள்ளன. மேலும் சர்வதேச அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என மதிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ