Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்களவை தேர்தல் செலவு ரூ.3,500 கோடி

நடந்து முடிந்த இந்த தேர்தலில் ரூ.3,500 கோடி செலவாகி இருக்கிறது. இது கடந்த தேர்தலை விட 150 சதவிகிதம் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வாக்களித்த சின்னத்தை உறுதிப்படுத்துவதற்காக முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ரசீது நடைமுறை, அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட்டது உள்ளிட்டவை தேர்தல் செலவுத் தொகையை உயர்த்தி விட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ரூ.3,426 கோடி செலவு முழுவதும் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது.
 
 
மக்களவைக்கு 1952ம் ஆண்டுதான் முதல் முறையாக தேர்தல் நடந்தது. அதிலிருந்து தற்போது வரை எவ்வளவு ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று பட்டியல் தரப்பட்டுள்ளது. அதன்படி, 
 
வருடம் (ரூபாய் - கோடி ) 
 
1952 - 10.45
 
1957 - 5.9
 
1977 - 23
 
1980 - 54
 
1989 - 154
 
1991 - 359
 
1996 - 597
 
1998 - 666
 
1999 - 880
 
2009 - 1,400
 
2014 - 3,500
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ