Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயா பேங்க்: நிகர லாபம் 39% வீழ்ச்சி!

பொதுத்துறையைச் சேர்ந்த விஜயா பேங்க் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.136 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.224 கோடியாக இருந்தது. கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது நடப்பு காலாண்டில் நிகர லாபம் 39 சதவிகிதம் குறைந்துள்ளது. மொத்த வருவாய் ரூ.2,680 கோடியிலிருந்து ரூ.3,029 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
 
இந்த லாப வீழ்ச்சிக்கு காரணம் வாரக்கடன் அதிகரித்ததே என்கிறது இவ்வங்கி. கடந்த ஆண்டு இதே நான்காவது காலாண்டில் 2.17 சதவிகிதமாக இருந்த வாராக்கடன், 2.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ