Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5,000 தொழிலாளர்கள் வி.ஆர்.எஸ்: நோக்கியா அறிவிப்பு

மத்திய, மாநில அரசுகளுடன் வரி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, ஸ்ரீ பெரும்புதூர் தொழிலாளர்களுக்கு நோக்கியா நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ள காலவரையறை ஏதும் நிர்ணயிக்கவில்லை என்று நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 
இந்த திட்டத்தை இதுவரை 5 ஆயிரம் தொழிலாளர்கள் தேர்வு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவுடன் வரி தொடர்பான பிரச்னையை தீர்க்க, இந்தியா-பின்லாந்து இடையேயான வரி ஒப்பந்தத்தை பயன்படுத்த நோக்கியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த பிரச்னைக்கு தீர்வுகண்ட பின்பே ஒப்பந்தப்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்ஃபோன் தொழிற்சாலை மைக்ரோசாஃப்ட்டிடம் ஒப்படைக்கபடும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP