Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்ற இறக்கங்களுடன் இந்திய பங்கு சந்தைகள்!

இன்று காலை (15-05-2014) ஏற்றத்துடன் தொடங்கி பின்னர் சரிவில் இருந்த இந்திய பங்கு சந்தைகள், தற்போது 12.55 மணியளவில் மீண்டும் ஏற்றத்தில் உள்ளன. நாளை வரவிருக்கும் தேர்தல் முடிவுகளை அடுத்து, புதிய அரசால் இந்திய பொருளாதாரம் மேன்மை அடையலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. மேலும் தற்போது ரூபாயின் மதிப்பு 59.36 என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 88 புள்ளிகள் அதிகரித்து 23,903 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 19 புள்ளிகள் அதிகரித்து 7,128 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக டி.வி.எஸ் மோட்டார் பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், பார்தி ஏர்டெல் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.   
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP