Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முகேஷ் அம்பானியின் மாளிகை போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் இல்லம்தான் உலகிலேயே விலை உயர்ந்த மிக ஆடம்பரமான மாளிகை என்றும், மேலும் உலக அளவில் ஆடம்பரமான மாளிகைகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் மாளிகைக்கே முதலிடம் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

 
தொழிலதிபர்களின் சொகுசு இல்லங்கள் பற்றிய பட்டியலில், உருக்கு சக்ரவர்த்தி லட்சுமி மிட்டலின் லண்டன் மாளிகையையும் இணைத்துள்ளது.
 
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் சொகுசு பங்களா 27 தளங்களைக் கொண்டது. 4,00,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த மாளிகைக்கு அன்டிலியா எனவும், இந்த பெயர் அட்லாண்டிக் சமுத்திரத்தில் இருந்ததாக கருதப்படும் ஒரு கற்பனைத் தீவின் பெயரே என்று கூறப்படுகிறது.  இந்த கனவுலகத்தை கட்டி முடிப்பதற்கான செலவு 100 கோடி டாலரிலிருந்து 200 கோடி டாலர் (சுமார் ரூ.12,000 கோடி) வரை ஆகியிருக்கும் என்று கட்டுமான நிபுணர்கள் உத்தேசமாக மதிப்பீடு செய்துள்ளனர். மேலும் முகேஷ் அம்பானியின் இந்த அரண்மனையை பராமரிப்பதற்கு மட்டும் 600 பணியாளர்கள் உள்ளனர். தரைத்தளத்திற்கு கீழே ஆறு தளங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வகையில் மூன்று ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
போர்ப்ஸ் பட்டியலில் மொத்தம் 21 சொகுசு மாளிகைகள் இடம் பெற்றுள்ளன. ரிலையன்ஸ் அதிபரின் இல்லம் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான லட்சுமி மிட்டலின் இரண்டு வசந்த மாளிகைகள் 5 மற்றும் 18வது இடத்தை பிடித்துள்ளன. என்ன வாழ்க்கை பாஸ் இது.....
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ