Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டுவிட்டர் கருத்து பரிமாற்றத்தில் மோடிக்கு முதலிடம்!

டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் குறித்த கருத்து பரிமாற்றத்தில் நரேந்திர மோடி முதலிடத்தையும், கெஜ்ரிவால் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 
 
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் வாயிலாக நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்பதையடுத்து, 
சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களும், பிரபலங்களும் தங்கள் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை வெளியிட்டு வருகின்றனர். ஜனவரி மாதத்திலிருந்து மே 12ம் தேதி வரையிலான காலத்தில் அரசியல் நிலவரம் குறித்து டுவிட்டரில் 5.60 கோடி பேர் கருத்து பரிமாற்றம் செய்துள்ளனர். இதில், நரேந்திர மோடி குறித்து தங்களது எண்ணங்களை வெளியிட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் 1.10 கோடி. இது ஒட்டுமொத்த பரிமாற்றத்தில் 20 சதவிகிதமாகும். மேலும் பாரதீய ஜனதா கட்சி குறித்து 60 லட்சம் பேர் கலந்துரையாடி உள்ளனர். இது ஒட்டுமொத்த பரிமாற்றத்தில் 11 சதவிகிதமாகும். 
 
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் குறித்து 50 லட்சம் பேர் குறிப்பிட்டுள்ளனர். அவரது கட்சி குறித்து விசாரித்தவர்கள் 82 லட்சம் பேர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து விசாரித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சமாக மட்டுமே உள்ளது.
 
கூகிள் டிரெண்டில் அரசியல் தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தில் மோடி முதலிடத்திலும், பிரதமர் மன்மோகன்சிங் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ