Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தத்தளிக்கும் காங்கிரஸ், காணாமல் போகும் திமுக!

இன்று அதிகாலையில் இருந்தே இந்திய மக்களுக்கு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த ஆர்வமானது கொஞ்சம் அதிகமாகவே தொற்றிக் கொண்டது. உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டை தெருக்களில், தேனீர் கடைகளில் நின்று பார்ப்பது போல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படும் தேர்தல் முடிவுகளையும் அதே ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

பேருந்து பயணங்கள் ரயில் பயணங்கள் என எல்லாவற்றிலும் மக்களின் பேச்சுக்கள் தேர்தல் ரிசல்ட் பற்றியதே. இதே பரபரப்புடன் தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.  தற்போது தேசிய அளவில் பா.ஜ.க முன்னிலை வகிக்க, தமிழ்நாடு அளவில் அ.தி.மு.க கட்சி முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு டெபாசிட் கிடைக்குமா? கிடைக்காதா என்கிற நிலைமை. ஆனால் தி.மு.க இருக்கும் இடமே தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் (மகேசன்) தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனா... அழகிரி ஹேப்பி அண்ணாச்சி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close