Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்தியில் நிலையான ஆட்சி அமைவதால் பங்குச் சந்தைகள் எழுச்சி!

பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளதால் மத்தியில் நிலையான ஆட்சி அமைகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தைகளில் எழுச்சி ஏற்பட்டது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ்’ 25,000 புள்ளிகளையும், நிஃப்டி 7,550 புள்ளிகளையும் கடந்தது.
 
 
வெள்ளிக்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 1,400புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து இருந்தது. அதேசமயம், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் ஐ.டி. துறை உள்பட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை குறையத் தொடங்கியது.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்செக்ஸ் 67 சதவிகிதம் உயர்ந்தது. இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் சென்செக்ஸ் 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிதி நிறுவனங்கள் சுமார் ரூ.84,000 கோடி முதலீடு செய்துள்ளன. 
 
வர்த்தகத்தின் இடையில் கனரா பேங்க் 19.19 சதவிகிதமும், யெஸ் பேங்க், பாரத ஸ்டேட் வங்கி 8.66%  பஞ்சாப் நேஷனல் பேங்க் 8.62 %, இண்டஸ்இந்த் பேங்க் 8.31% போன்ற வங்கி பங்கு விலை மிகவும் உயர்ந்தது.
 
குறிப்பாக வங்கி, ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் உயர்ந்தது.
 
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் சேசா ஸ்டெர்லைட், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் உயர்ந்தது.
 
அதேசமயம், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால் டாட்டா ஸ்டீல், ஐ.டி.சி., விப்ரோ, இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் குறைந்தது.
 
வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்’ 216 புள்ளிகள் அதிகரித்து 24,121 புள்ளிகளில் முடிவடைந்தது. டிசம்பர் மாதத்திற்குள் இது 30,000 புள்ளிகளாக உயரும் என பங்கு சந்தை நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 79.85 புள்ளிகள் அதிகரித்து 7,203 புள்ளிகளில் நிலை கொண்டது. அதிகபட்சமாக 7,563 புள்ளிகளுக்கு சென்றது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close