Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் 4% வீழ்ச்சி!

பொதுத்துறையைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபம் 4 சதவிகிதம் குறைந்து ரூ.162 கோடியாக உள்ளது. வாராக்கடன்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதால் லாபம் குறைந்துள்ளது என்கிறது இவ்வங்கி. 
 
 
கடந்த நிதியாண்டில் இவ்வங்கி வழங்கிய கடன் 4 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.83 லட்சம் கோடியாக உள்ளது. வங்கி திரட்டிய டெபாசிட் தொகை 6 சதவிகிதம் உயர்ந்து ரூ.2.40 லட்சம் கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் 13 சதவிகிதம் அதிகரித்து ரூ.6,493 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூலை&டிசம்பர் மாத காலத்தில் தகுதிவாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்து ரூ.2,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ