Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏப்ரல் மாதத்தில் ரப்பர் இறக்குமதி 80% அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் இயற்கை ரப்பர் இறக்குமதி 80 சதவிகிதம் அதிகரித்து 26,445 டன்னை எட்டியுள்ளது. கடந்த 2013 ஏப்ரல் மாதத்தில் 14,396 டன் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. சர்வதேச சந்தையில் விலை குறைவாக இருந்ததால் டயர் நிறுவனங்கள் அதிகம் இறக்குமதி செய்துள்ளதாக ரப்பர் வாரியம் கூறியுள்ளது.
 
 
இந்தோனேஷியா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து ரப்பர் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி அதிகரித்ததற்கு உள்நாட்டில் ரப்பர் உற்பத்தி சரிவடைந்ததும் ஒரு காரணமே. ஏப்ரல் மாதத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தி 4 சதவிகிதம் சரிந்து 51,000 டன்னாக குறைந்துள்ளது. மேலும் பயன்பாடு 82,980 டன்னிலிருந்து 81,500 டன்னாக குறைந்துள்ளது. ஆக இனி வரும் காலகட்டங்களில் ரப்பர் துறை சார்ந்த பங்குகள் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ