Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 24,363 ஆக ஏற்றம்!

இன்று 19-05-2014 காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், முடிவிலும் ஏற்றத்திலே முடிவடைந்தன. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.52 ரூபாயாக அதிகரித்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 241 புள்ளிகள் அதிகரித்து 24,363 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 60 புள்ளிகள் அதிகரித்து 7,263 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக பி.இ.எம்.எல் நிறுவன பங்கின் விலை 19 சதவிகிதம் அதிகரித்தும், பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 15 சதவிகிதம் அதிகரித்தும், கோல் இந்தியா மற்றும் என்.டி.பி.சி பங்குகளின் விலை தலா 13 மற்றும் 12 சதவிகிதம் அதிகரித்தும், டி.வி.எஸ் மோட்டார் மற்றும் விப்ரோ பங்குகளின் விலை தலா 4 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தன. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ