Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் 558 கோடி டாலர் முதலீடு!

இந்திய நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிநாடுகளில் 558 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். அப்போது வெளிநாடுகளில் 1,524 கோடி டாலர் முதலீடு செய்திருந்தது பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
 
 
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் பொதுவாக பங்குகள், கடன்கள் மற்றும் உத்தரவாதங்கள் வழங்குதல் அடிப்படையில் முதலீடு செய்கின்றன. சென்ற மாதத்தில் பார்தி ஏர்டெல், எல்டர் பார்மாசூட்டிக்கல்ஸ், ஹால்டியா கோக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP