Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.சி.ஐ.சி.ஐ வீட்டு கடன் வட்டி குறைப்பு!

 
 
தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, 10.25% வட்டி விகிதத்தில் வீட்டு கடன் வழங்கி வந்தது. இதையடுத்து தற்போது புதிய வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 75 லட்சம் ரூபாய்க்குள் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் 10.15%மாகவும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதத்தில் 10.5 - 11.25%மாகவும் உள்ளது. இதுவே பெண்களில் 75 லட்சம் ரூபாய்க்குள் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு 10.10% வட்டி என்று அறிவித்துள்ளது.
 
இந்த வட்டி மாற்றம் சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், மேலும் இந்த புதிய திட்டம் மே 15 முதல் ஜூன் 30 வரையில் வீட்டுக்கடன் வாங்குபவர்களூக்கு மட்டுமே என்கிறது இவ்வங்கி.    
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ