Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
பொதுத்துறை வங்கிகளில் தனக்குள்ள பங்கு மூலதனத்தை மத்திய அரசு 50 சதவிகிதத்துக்கும் கீழாக குறைத்துக் கொள்ள வேண்டும் என நாயக் கமிட்டி கடந்த வாரம் அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, வங்கிகளை கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் அக்கமிட்டி கூறியிருந்தது. இதையொட்டி வங்கி ஊழியர் சங்கங்கள் வரும் மே 23ம் தேதி, நாயக் கமிட்டி பரிந்துரைகளை அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்தி இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
 
 
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட 5 பெரிய சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ