Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவில் இந்தியர்களுக்காக விசா சேவை!

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி, நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் சான்பிரான்சிஸ்கோ ஆகிய ஆறு நகரங்களில் தங்களுடைய சேவை மையங்களைத் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆறு சேவை மையங்களும் நாளை முதல் செயல்படும் என்றும், இந்த சேவை மையங்கள் இந்திய விசா தேவைகள், இந்திய வெளிநாட்டு குடிமக்கள், இந்திய வம்சாவளியினர், அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்தியாவிற்கு வர எண்ணுவோரின் தேவைகள் போன்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் என்று காக்ஸ் அன்ட் குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
 
இந்த காக்ஸ் அன்ட் குளோபல் நிறுவனம் சுற்றுலா, வணிகம், மாநாடு, கல்வி மற்றும் பிற தேவைகளுக்கான விசா பணிகளும் இந்த மையங்களில் மேர்பார்வையிடப்படும். இதுதவிர அமெரிக்காவில் வாழும் பிற நாட்டவர்களின் விண்ணப்பங்களையும் இந்த மையங்கள் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ