Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைந்த்ரா.காம் நிறுவனத்தை வாங்குகிறது ஃப்ளிப்கார்ட்

ஆன்லைனில் ஆடை போன்ற அழகு பொருட்களை விற்கும் நிறுவனமான மைந்த்ரா.காம் நிறுவனத்தை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பணம் மற்றும் பங்குகளாக கொடுத்து சுமார் 2000 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக இந்நிறுவனங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் நாளை நடக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் இ-காமர்ஸ் துறையில் இந்த ஒப்பந்தம் மிகப்பெரியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஃப்ளிப்கார்ட்டின் இந்த முடிவு இந்தியாவில் புதிதாக வர்த்தகத்தை தொடங்கி இருக்கும் அமேசான் நிறுவனத்தை சமாளிக்க எடுக்கும் முயற்சி எனவும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ