Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டச் செய்தால் லன்ச்: புதிய ஆப்ஸ்

இன்று எல்லாம் ஆப்ஸ்மயமாகி வருகிறது. எல்லா செயல்களுக்கும் ஆப்ஸை பயன்படுத்த துவங்கியுள்ளதால் ஆப்ஸ் நிறுவனங்களும் இஷ்ட்டத்துக்கு ஆப்ஸ்களை தயாரித்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக சீம்லெஸ் எனும் ஆப்ஸை நீங்கள் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் உங்களுக்கு பசிக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த ஹோட்டல் என்று கூறினால் பின் அங்குள்ள உணவுகளின் பட்டியல் காண்பிக்கப்பட்டு பின் அதனை ஆர்டர் செய்தால் அரை மணி நேரத்தில் உணவு உங்களை தேடி வரும் என்கின்றனர் ஆப்ஸ் தயாரிப்பாளர்கள்.


 


இது தற்போது ஒரு சில வெளிநாடுகளில் மட்டுமே இருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது. இது தவிர ஊபெர் எனும் ஆப்ஸும் பிரபலமாகி வருகிறது இதன் மூலம் நாம் எங்காவது வழிதவறி சென்றுவிட்டால் உங்கள் ஆப்ஸ் கால்டேக்ஸியை அழைத்து உங்களை காப்பாற்றும் என்கின்றனர். இதுபோன்று பிரபலமாகும் ஆப்ஸ்களின் முதல்குறி இந்திய சந்தையாக தான் இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close